பார்வையற்றோருக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது எங்களுக்கு பெரும்பாக்கியம் மட்டுமல்ல, எங்களின் கடமையாகும்
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சியில நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழாவில், அமைச்சர் மூர்த்தி பங்கேற்று சங்க வளர்ச்சிக்கு 50,ஆயிரம் நிதியும் 50 பார்வையற்றவர்களுக்கு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் சங்க ஆண்டு விழாவுக்கு , மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் குமார் தலைமை வகித்தார். மாற்றுதிறனாளிகள்.நல அலுவலர். ரவிச்சந்திரன், சமூக சேவகரும் திரைப்பட நடிகருமான ரம்மி சௌந்தர் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர், வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இதில், நலத்திட்ட உதவிகள் வழங்கி, அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது .முதல்வர், தனது பொறுப்பிலேயே மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தை வைத்துள்ளதால், கூடுதல் கவனம் எடுத்து செய்து வருகின்றார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது எங்களுக்கு பெரும்பாக்கியம் மட்டுமல்ல, எங்களின் கடமையாகும். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முயற்சிகள் செய்து வருகிறோம். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். எந்த உதவிகள் கேட்டாலும் செய்ய அரசு தயாராக உள்ளது என்றார் அமைச்சா மூர்த்தி கூறினார்.