மதுரையில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கல்

Welfare Assistance In Madurai மதுரையில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைஅமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.;

Update: 2024-02-29 10:57 GMT

சிறுபான்மையின பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் செஞ்சி மஸ்தான். 

Welfare Assistance In Madurai

மதுரை மாவட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் 137 பயனாளிகளுக்கு ரூபாய் 20 இலட்சத்து 8 ஆயிரத்து 170 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 2022-2023-ஆம் ஆண்டிற்கு திரட்டப்பட்ட நன்கொடை தொகைக்கு தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் இணை மானியத்தொகை மற்றும் விலையில்லா தையல் இயந்திரம் என 137 பயனாளிகளுக்கு ரூபாய் 20 இலட்சத்து 8 ஆயிரத்து 170 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Welfare Assistance In Madurai


பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான். 

இந்நிகழ்வில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி .மஸ்தான் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர்,பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். சிறுபான்மையின மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு வலுசேர்க்கும் விதமாக முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் போன்ற சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சார்ந்த வயது முதிர்ந்த, ஆதரவற்ற மகளிர் நலனுக்காக மகளிர் உதவும் சங்கம் திரட்டும் நன்கொடை நிதி ஆதாரத்திற்கு ஏற்ப ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் இணை மானியமாக 1:2 என்ற விகிதத்தில் அதிகபட்சம் ரூபாய் 20 இலட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுரை மாவட்ட முஸ்லீம் மகளின் உதவும் சங்கத்தால் 2022-2023-ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட நன்கொடைத்தொகைக்கு, தமிழ்நாடு அரசின் மூலம் முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவங்களுக்கு ரூ.1232000,

மற்றும் ரூ.768000ஆக மொத்தம் ரூ.2000000இணை மானியத்தொகை வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 132 முஸ்லீம் மகளிர் பயனாளிகளின் பொருளாதார மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் சிறுவணிக உதவித் தொகையாக ரூ.1980000 வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5 பயனாளிகளுக்கு ரூ.28170 மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், சிறுபான்மையின மக்களின் நலனுக்காக உலமாக்கள் நலவாரியம்,கிறிஸ்தவ தேவாலயங்கள் நலவாரியம், புனித பயணத்திற்கான நிதி உதவி போன்ற திட்டங்கள், தேவாலயங்களை பழுது பார்த்தல், கல்லறை தோட்டம் மற்றும் கபரஸ்தான் அமைத்தல், டாம்கோ கடனுதவித் திட்டம், கல்வி உதவித்தொகை திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் , ”எல்லோர்க்கும் எல்லாம்” என்ற நோக்கில் சிறுபான்மையின மக்களின் நலனுக்காகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள் என, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி .மஸ்தான் , பேசினார்.

இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் .சங்கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்

நல அலுவலர் ஆர்.சுரேஷ் குமார் மதுரை மாவட்ட முஸ்லீம் மகளின் உதவும் சங்க செயலாளர் .முகமதுகான் , இணைச்

செயலாளர்கள் சேக் அப்துல் காதர், ரெஹானா பேகம்உறுப்பினர்கள் ஜாபர் சாதிக், தில்சாத் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News