தீபாவளி: லயன்ஸ் கிளப் சார்பில் ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி
லயன்ஸ் கிளப் சார்பில், கப்பலூரில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தனியார் மண்டபத்தில், லயன்ஸ் கிளப் சார்பில், தீபாவளி திருநாளை முன்னிட்டு ஏழை குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக, லயன்ஸ் கிளப் மாவட்ட அமைச்சரவை முதன்மை ஒருங்கிணைப்பாளர் pmjf lion ca Dசெல்வம், வாழ்த்துரை லயன் வட்டார தலைவர் சுசிலா செல்வம், முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், மற்றும் தலைவர் செந்தில்நாதன், செயலாளர் சசிகுமார், பொருளாளர் ராஜபிரபாகரன், விழா ஒருங்கிணைப்பாளர் கே முரளிதரன், ஆர்யா ஆகியோர் ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் இனிப்பு வகைகள் வழங்கினர்.