மதுரை மாநகரில் பல்வேறு குற்றச்சம்பவங்கள்: போலீஸார் விசாரணை
மதுரை மாநகரில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்;
தெப்பக்குளம், மஹால் பகுதியில் பைக் வந்த மர்ம நபர்களால் அடுத்தடுத்து செல்போன் பறிப்பு
இதே போல, மகால் எட்டாவது தெருவை சேர்ந்தவர் ரகுநாத்( 43.) இவர் பழைய குயவர் பாளையத்தில் பள்ளிக்கூடம் எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் சென்ற இரண்டு ஆசாமிகள் அவர் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்றுவிட்டனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அடுத்தடுத்து செல்போன் பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
சுப்ரமணிய புரத்தில் பேக்கரியில் திடீர் தீ விபத்து: போலீஸ் விசாரணை
மதுரை ,சுப்பிரமணியபுரம் மூன்றாவது மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 55. இந்த இங்கு பேக்கரி நடத்தி வருகிறார் .இங்கு வைக்கப்பட்டிருந்த வனஸ்பதி எண்ணையில் இருந்து திடீரென்று தீப்பற்றியது. இதனால் வேகமாகப் பரவிய தீயால் கேக் வகைகள் பேக்கரி பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பாக பாலசுப்பிரமணியன் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. யாராவது மர்ம நபர்கள் வனஸ்பதியின் மீது தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர் .இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பிருந்தா( 63 ).இவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த ஆட்சிட்டை எடுத்து குடித்து விட்டார். இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கணவர் லட்சுமணன் கொடுத்த புகாரில் கீரைத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் தாயை உருட்டுக்கட்டையால் தாக்கிய மகன் கைது
திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் சீனிவாசன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் லட்சுமி( 45 ).இவருக்கு இரண்டு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார். அவரது மகன்களில் ஒருவர் அய்யங்காளை28. இந்த நிலையில் குடும்ப பிரச்னையால், தாய்மீது கோபம் கொண்ட அய்யங்காளை அவரை உருட்டுக்கட்டையால் தாக்கினார் .இந்த சம்பவ குறித்து தாய் லட்சுமி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தாயை தாக்கிய மகன் அய்யங்காளையை கைது செய்தனர்.