நகர்புற உள்ளாட்சி தேர்தல்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

திருப்பரங்குன்றம் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.;

Update: 2022-01-29 08:53 GMT

திருப்பரங்குன்றம் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ,மதுரை தெற்குக்கு மாவட்டம் சார்பாக நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது .

இதில், மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சிமான் சிக்கந்தர் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை கூறினார். இதில், மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் தலைமை வகித்தார்.

மாநில மகளிர் அணி செயலாளர் நஜ்மா பேகம், மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபூர் ரகுமான் ஆகியோர் வேட்பாளரை அறிமுகப்படுத்தினர். இதில், 30 பெண்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News