மதுரை அருகே வாலிபர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேர் கைது

மதுரையில் நடந்த பல்வேறு குற்றசம்பவங்கள் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்;

Update: 2022-12-25 16:00 GMT

பைல் படம்

மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் வாலிபர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய இரண்டு வாலிபர்கள் கைது: 


மதுரை செல்லூர் நந்தவனம் ஈ.வி .ஆர் தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி மகன் செல்வபாண்டி( 25 ).இவருக்கும் பாலம் ஸ்டேஷன்ரோட்டை சேர்ந்த இளங்கோ மகன் அலெக்ஸ் பாண்டியன்( 23 ). இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் ராஜாமில்ரோடு சந்திப்பில் சென்று கொண்டிருந்த செல்வபாண்டியை, அலெக்ஸ் பாண்டியன்( 23 ),தனுஷ் மற்றும் பீபிகுளம் முல்லை நகரை சேர்ந்த வேலுச்சாமி மகன் தினேஷ்( 23 ) மூவரும் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து செல்வபாண்டி செல்லூர் போலீஸில் புகார் செய்தார். போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அலெக்ஸ் பாண்டியன், தினேஷ் ஆகிய  இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான தனுசை தேடி வருகின்றனர்.

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து-ஒருவர் கைது:

மதுரை,திருப்பாலை திருவள்ளுவர்தெரு சுப்பிரமணியன் மகன் சீனிவாசன்(36.). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பெட்டிக்கடை மணிமாறனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.இந்த நிலையில் அய்யர் பங்களாவில் சென்ற சீனிவாசனை வழிமறித்த மணிமாறன் என்ற குழந்தையும் ,பெட்டிக்கடை மணிமாறனும் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து சீனிவாசன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து மணிமாறன் என்றகுழந்தையை கைது செய்தனர்.மற்றொருவர் பெட்டிக்கடை மணிமாறனை தேடிவருகின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றம் பாம்பன்சாமிகோவில் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு முயற்சி தோல்வி:

மதுரை, திருப்பரங்குன்றம் கற்பகவிநாயகர் கோவில்தெருவைச்சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி கவிதா(48.) இவர் பாம்பன்சாமிகோவில் அருகே சென்றுகொண்டிருந்தார்.அவரை இரண்டு மர்ம ஆசாமிகள் வழிமறித்து அவர் அணிந்திருந்த தாலிச்சங்கிலியை பறித்தனர்.அப்போது அவர்களை பறிக்கவிடாமல் இருக்க கவிதா போராடினார்.இதனால் ஆளுக்கொருபக்கம் சங்கிலியை இழுத்தபோது சங்கிலி துண்டாகி இரண்டானது.இந்த போராட்டத்தில் திருடர்கள் ஒன்றேமுக்கால் பவுன் சங்கிலியுடன் தப்பிஓடிவிட்டனர்.இந்த சம்பவம்குறித்து கவிதா திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரிடம் செயின்பறித்த ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

முத்துப்பட்டி கோவில் அருகே வாளுடன் பதுங்கி இருந்த ரவுடி கைது:

மதுரை, சுப்பிரபணியபுரம் போலீசார் முத்துப்பட்டிபகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்‌.அவர்கள் ஐந்துபனைபரம் கோவில் அருகே சென்றபோது போலீசை கண்டதும் வாலிபர் ஒருவர் ஓடிச்சென்று பதுங்கினார்.அவரை‌ சுற்றிவளைத்து பிடித்தனர்.அப்போது அவர் பிரபலரவுடி முத்துப்பட்டி அய்யனார்புரம் மெயின்ரோட்டை சேர்ந்த கண்ணன் மகன் சுரேஷ்27 என்று தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்து சோதனை செய்தனர்.அவர் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தார்.அந்த வாளை பறிமுதல் செய்தனர்.

முத்துப்பட்டி கல்லரை அருகே போதை ஊசி மாத்தினையுடன் இரண்டு வாலிபர்கள் கைது:

மதுரை சுப்பிரமணியபுரம் போலீசார் முத்துப்பட்டியில் ரோந்து சென்றனர்.அவர்கள் முத்துப்பட்டி கல்லரை பகுதியில் சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு வாலிபர்களை பிடித்தனர்.அவர்களிடம் சோதனை செய்தனர். அவர்களிடம்40பாக்கெட்டுகள் போதைப்பொருட்களும்,ஐந்து போதை மாத்திரைகளும்,போதை ஊசியும்,10கலர் பேப்பர்களும் இருந்தன.அவைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர் .விசாரணையில் அவர்கள் சிவகங்கைமாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ஷாகுல்ஹமீது மகன் ஆஷிக்அலி(26,) சிவகங்கை மாவட்டம், சாலையூர் பக்கீர்மஸ்த்தான் மகன் சையத்முகமதுஅஸபக்(19 ) என்று தெரியவந்தது.அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.


Tags:    

Similar News