மதுரை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய 2 பேர் கைது

மதுரையில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

Update: 2023-02-14 01:00 GMT

பைவ் படம்

மதுரை கீரைத்துரையில் முன் விரோதத்தில் வாலிபரை தாக்கிய அண்ணன் தம்பி கைது:

மதுரை ,அனுப்பானடி சோனையா நகரை சேர்ந்தவர் பாண்டி மகன் சோனையா(38.) இவருக்கும், அனுப்பானடி கிறிஸ்டியன் தெரு ஈஸ்வரன் மகன் ராஜபாண்டி (19,)  இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில்,

சிந்தாமணி ரிங் ரோடு சோதனையா நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்த சோனையாவை, வழிமறித்த ராஜா பாண்டி அவருடைய அண்ணன் மகாராஜன்(21.) இருவரும் ஆபாசமாக பேசி கையாலும் கல்லாலும் தாக்கினர் .இந்த தாக்குதல் குறித்து சோனையா, கீரைத் துரை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து, அண்ணன் தம்பிகளான மகாராஜன், ராஜபாண்டி இருவரையும் கைது செய்தனர்.

அரசரடி  பகுதியில்  அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்: பயணி கைது :

மதுரை, திருநகர் தனக்கன்குளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் மூக்கன்( 53 ).இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை செய்து வருகிறார்.இவர் பணிபுரிந்த பஸ்ஸில் அவனியாபுரம் அருணகிரி கோவில் தெருவை சேர்ந்த வேல்சாமி(42.) என்பவர் பயணம் செய்தார் .இவர், அரசரடி மெயின் ரோடு வாட்டர்டேங்க் அருகே சென்றபோது, பரவை மார்க்கெட்டில் பேருந்தை நிறுத்தும்படி கண்டக்டரிடம் கேட்டுள்ளார்.

இதில், வேல்சாமிக்கும், கண்டக்டருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த வேல்சாமி, கண்டக்டரை ஆபாசமாக பேசி தாக்கினார். இந்த தாக்குதல் குறித்து பஸ் கண்டக்டர் மூக்கன் எஸ். எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை தாக்கிய வேல்சாமியை கைது செய்தனர்.

மாமூல் கொடுக்க மறுத்த ஜவுளி கடை மீது கல்வீசி தாக்குதல்: இரண்டு பேர் கைது

மதுரை,வடக்கு சித்திரை வீதியை சேர்ந்தவர் சுப்புராம் மகன் சரவணன் 40. இவர், இந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார் .இவரது கடைக்கு வந்த இரண்டு பேர் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். இதற்கு உரிமையாளர் சரவணன் மாத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் அவரையும் ஊழியர்களையும் ஆபாசமாக பேசி சரமாரியா கற்களை வீசி கடையை தாக்கி சூறையாடி உள்ளனர். இந்த சம்பவத்தில் ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்தன. இந்த சம்பவம் குறித்து, சரவணன் திலகர்திடல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவுளிக்கடைமீது கல் வீசி சேதப்படுத்திய அவனியாபுரம் பெரியார் நகர் குமார் என்ற பைப் குமார் 42, திருமங்கலம் ஆனந்தன் தெரு சிவராஜா 43 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பழக்கடை உரிமையாளரை கத்தி முனையில் மிரட்டி பணம் பறிப்பு:அண்ணன் தம்பி உள்பட 3 பேர் கைது:

மதுரை, பாண்டியன் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் அஜித்குமார்(25.) இவர் கூடல் நகர் மெயின் ரோட்டில் பழக்கடை நடத்தி வருகிறார் .இவரது கடைக்கு வந்த மூன்று பேர் அவரை கத்தி முனையில் மிரஞ்டி அவரிடம் இருந்து ரூ 500-ஐ பறித்துச் சென்று விட்டனர் .இந்த சம்பவம் குறித்து அஜித்குமாய் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் பணம் பறித்த அண்ணன் தம்பிகளான விளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெரு அன்னக்கொடி மகன்கள் பழனி குமார்( 31.), கண்ணன்( 27.) பொதுவிளாங்குடி முத்துராமலிங்கத் தேவர் தெரு பஞ்சாட்சரம் மகன் பாலசுப்பிரமணி( 34.) ஆகிய மூவரையும் கைது செய்தனர். 

Tags:    

Similar News