ஆளுநரை விமர்சித்த சின்னத்திரை நடிகர் போஸ் வெங்கட்

ஆறாவது விரல் எதுக்கு, ஆளுனர் எதற்கு நமக்கு. ஆறாவது விரலால் எந்த பிரயோஜனமும் இல்லை.-இயக்குநர், நடிகர் போஸ் வெங்கட் பேட்டி

Update: 2022-04-09 16:35 GMT

போஸ் வெங்கட்

மதுரையில் பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த திமுக தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான ,போஸ் வெங்கட் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

டீசல் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். அதுக்கு போராட்டம் செய்யாமல் ,சொத்து வரிக்கு போராடுகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் அந்த பிரச்சனை இல்லை. அதற்கு சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டிய தான் நமக்கு நல்ல முதல்வர் கிடைத்திருக்கிறார். பெட்ரோலுக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 3 ரூபாய் பெட்ரோலுக்கு குறைத்துள்ளது. மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். அது போல, தமிழகத்தில் விலைவாசி பொருத்தவரை எந்த பிரச்சனையும் வராது என்று கூறினார்

நீட் விவகாரத்தில், ஆளுநர் செயல்பாடு குறித்த கேள்விக்கு, ஆறாவது விரல் எதுக்கு, ஆளுனர் எதற்கு நமக்கு. ஆறாவது விரலால் எந்த பிரயோஜனமும் இல்லை.  திமுக சார்பாக மத்தியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து தான் வருகிறார்கள். இந்திய அளவில் திமுக எம்பிக்கள் கொடுக்கும் அளவிற்கு அழுத்தம் வேறு யாரும் கொடுப்பதில்லை. ஆளுநரை வேண்டாம் என்கிற தைரியமும் தமிழக முதல்வருக்கும், தமிழக எம்பிகளுக்கு மட்டும்தான் உள்ளது.

விலைவாசியை பொருத்த அளவில் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது ஐந்து வருடத்திற்கு வரி உயர்வு அனைத்திலும் இருக்கும் அனைவரும் பொறுத்துக் கொள்ளுங்கள் என்கிறார். எப்படி இந்த அளவுக்கு அவருக்கு தைரியம் உள்ளது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் கொடுத்த தைரியத்தில் ஆடுகிறார்கள். 2024இல் எல்லாம் மாறும் நம்புவோம் என்று கூறினார்.

Tags:    

Similar News