அலங்காநல்லூர் சமுதாய கூடத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாய கூடத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.;
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில், கிருஷ்ணா வேளாண்மை கிராமபுற கூட்டுறவு தகவல் தொழில்நுட்ப கல்லூரி சார்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை பயிற்சி அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி தொடங்கி வைத்தார்.
கல்லூரி சார்பில், ஜோஸ்மின் சுஜாதா சரவணகுமார், கிருஷ்ணன் சுஜாதா, ஜெய்கணேஷ் ,தீர்த்தபதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர். விவசாயிகள் , வாவிடமருதூர் ஆர் .பி. குமார் பாலன், முத்துசாமி, மக்கள் மூர்த்தி ,ராமச்சந்திரன், கிருஷ்ணா ஆறுமுகம், ராமமூர்த்தி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டு ஆலோசனைகள் பெற்றனர்.