மதுரை அருகே திருப்பரங்குன்றம் கோயில் தேரோட்டம்

திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு;

Update: 2023-11-26 17:30 GMT

திருப்பங்குன்றம் முருகன்.

திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை; மூன்று மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம் கோவிலில், கார்த்திகை திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது .இந்த நிலையில், சிகர நிகழ்ச்சியான கார்த்திகை வைரத் தேரோட்டம் இன்று காலை தொடங்கி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தது.

இந்த நிலையில், இன்று தேரோட்டம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திருப்பரங்குன்றம், திருமங்கலம் கள்ளிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மேலும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறுமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பாதை யாத்திரையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.

மேலும் ,இன்று மாலை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு பின்னர் 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை விரிக்கும் நிகழ்வு உள்ளதாலும், திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மூன்று மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவதால் தொகுதி தற்போது திருவிழா கோலம் கொண்டுள்ளது.

Tags:    

Similar News