திருவள்ளுவர் தினம்: மதுரையில் வள்ளுவர் சிலைக்கு மரியாதை
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மதுரையில் வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மதுரை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் வள்ளுவர் உறவின் முறை தலைமைச் சங்கம் சார்பில், அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, பொங்கலிட்டு வழிபட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு, ஏ. கணேசன் தலைமை வகித்தார். புலவர் சங்கரலிங்கம், முன்னிலை வகித்தார். திருப்பதி ராஜன், வரவேற்றார். ஜோதிடர் வேலவன், ஜோதிடர் சங்க நிர்வாகிகளான சொக்கலிங்கம், ஜோதிடர், செயலாளர் ஆறுமுகம், ஜோதிடர், பொருளாளர் பன்னீர்செல்வம், செயல் தலைவர் ஆனந்த், ஒருங்கிணைப்பாளர் ஜோதிடர் தினகரன், ஆலோசகர் அர்ஜுனன் (சுகாதார ஆய்வாளர் ஓய்வு), பூசாரி அய்யனார் ஜோதிடர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.