திருமங்கலம் நகர்மன்ற தேர்தல்: அதிமுக மலர்விழி 18 வது வார்டில் தீவிர பிரசாரம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர் ச.மலர்விழி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்;

Update: 2022-02-10 12:30 GMT

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 18வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு ச. மலர்விழி    அதிமுக சார்பில் ல் போட்டியிடுகிறார் .

மதுரை மாவட்டம், திருமங்கலம், நகராட்டி தேர்தல் , மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய வார்டு பகுதிகளுக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், திருமங்கலம் நகராட்சி 18வது வார்டில்  அதிமுக வேட்பாளர் ச.மலர்விழி ள் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு  பிரசாரம் செய்தார்.

இவரது கணவர் சதீஷ்சன்முகம் கடந்த 2006 ஆம் ஆண்டு 18வது வார்டில் நகர் மன்ற உறுப்பினராக பதவி வகித்தார்..மேலும்  முதன்முதலாக சட்டமன்ற இடைத்தேர்தலின் போது பணம் கொடுக்கும் முறை திருமங்கலம் பார்முலா பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலையில் 2011ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது திருமங்கலம் நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நகர்மன்றத் துணைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது.

சதீஷ் சண்முகம் நகர்மன்ற துணைத் தலைவராக இருந்த பொழுது 18-வது வார்டு பகுதி மக்களுக்கு தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் பெற்று தந்துள்ளார். இப்பகுதியில் முதியோர், வாரிசுசான்றிதழ் போன்ற முக்கிய சான்றிதழ்களை நேரில் சென்று பெற்று தந்துள்ளார். மேலும் கடந்த இரண்டு கொரோனா ஊரடங்கு காலங்களிலும் இப்பகுதி மக்களுக்கு அரிசி தொகுப்பு, உணவு பொருள், கபசுர குடிநீர் என பல்வேறு உதவிகளை வார்டு பகுதி மக்கள் மட்டுமல்லாமல் திருமங்கலம் நகர் பகுதி மக்களுக்கும் தன்னால் இயன்றதை செய்து கொடுத்து வந்துள்ளார்.

இவரது நன்னடத்தையை மதித்து அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமி , ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க, தமிழக முன்னாள் வருவாய் துறை அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். பி .உதயகுமார்  வழிகாட்டுதலின் படி, திருமங்கலம் நகர செயலாளர் ஜெ.டி விஜயன்  எம்.சதீஷ் சண்முகம்  மனைவி மலர்விழி அவர்களுக்கு தற்பொழுதும் திருமங்கலம் நகராட்சி தேர்தலில் 18வது வார்டு குமரன் கோவில் தெரு, பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, ரசூல் கான் தெரு, தெரு, பள்ளிக்கூட சந்து, கார்மேகம் சந்து, ஆகிய பகுதிகளுக்கு மீண்டும் அவருக்கு தலைமை கழகம் வழிகாட்டுதலின்படி 18வது வார்டு பகுதி போட்டியிடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு மேலும் எந்த வித குறைகளும் இல்லாமல் தங்கள் குடும்பத்தில் ஒருவராக தன்னை ஜெயிக்க வைத்தால் இப்பகுதி மக்களுக்கு பணியாற்றுவேன் என ச.மலர்விழி அவர்கள் கூறியுள்ளார்.

மலர்விழி பட்டப்படிப்பு பயின்று றிருந்தாலும் அப்பகுதி மக்களிடையே எளிமையாக பழகக்கூடியவர். தற்பொழுது திருமங்கலம் நகரப்பகுதியில் அதிக குற்ற சம்பவங்கள் கொள்ளைச் சம்பவங்கள் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செய்து தருவதாக கூறி இப்பகுதி மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் .

18-வது வார்டு பகுதி வீதிகள் தோறும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமரா பொருத்த படுவதாகவும் மேலும் ஆழ்துளை மின்னியக்க தண்ணீர் வசதி, குறைதீர்ப்பு முகாம் மற்ற இடங்களில் மின்விளக்குகள் பொருத்துதல் சாலை வசதி போன்ற அத்தியாவசிய தேவைகளையும் கடந்த ஆட்சியில் நூறு சதவிகிதம் நிறைவேற்றிக் கொடுத்து உள்ள நிலையிலும் மீண்டும் இது போன்ற மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும் இவரது பகுதி கார்மேகம் நாடார் சந்து, பள்ளிக்கூட சந்து, பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, குமரன் கோவில் சந்து, ஆண்டவர் கோவில் சந்து, ரசூல் கான் சந்து, ஆகிய பகுதி மக்கள் அனைவரும் தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு அனைத்து சிறியோர் பெரியோர்கள் முதல் காலில் விழுந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் . அப்பகுதி மக்களும் இவரது கணவர் சதீஷ் சண்முகம் அவர்களது நன்னடத்தை மனதில் கொண்டு சமூக ஆர்வலர் ச. மலர்விழியின் நல் மனதை உணர்ந்து அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி வாக்குறுதி கொடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News