கள்ளச்சாவி போட்டு பொம்மை மூலப்பொருள்கள் திருட்டு

கே புதூர் தொழில்பேட்டையில் கள்ளச்சாவி போட்டு பொம்மை மூலப் பொருள்கள் திருடிய ஊழியர் கைது;

Update: 2023-06-29 09:30 GMT

கே புதூர் தொழில்பேட்டையில் கள்ளச்சாவி போட்டு பொம்மை மூலப் பொருள்கள் திருடிய ஊழியர் கைது 

மதுரை வில்லாபுரம் வீட்டுவசதிவாரிய குடியிருப்பைசேர்ந்தவர் செல்வராஜ் 64 .இவர் கே புதூர் தொழிற்பேட்டையில் பொம்மை தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு பொம்மைக்கு தேவையான மூலப்பொருட்களை மூட்டைகளில் வாங்கி அடுக்கி வைத்துள்ளார். அவற்றில் நான்கு மூடைகள் திருடு போயிருந்தன. கதவும் பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருடியது யார் என்று தெரியவில்லை

.இது குறித்து அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சி சி டிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர் .பின்னர் இந்த திருட்டில் ஈடுபட்ட செல்லூர் பாக்கியநாதபுரம் நாராயண குரு தெரு முத்துசாமி மகன் கருப்புசாமி 23 என்ற ஊழியரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர் ஏற்கெனவே தொழிற்சாலையின் கதவின் பூட்டுக்கான கள்ளச் சாவியை தயாரித்து வைத்துள்ளார். அதன் மூலம் திருடியது  தெரிய வந்தது.

தெற்கு வாசல் என்.எம்.ஆர். பாலத்தில் தந்தையுடன் வைக்கில் அமர்ந்து சென்ற ஒரு வயது குழந்தை தவறி விழுந்து பலி

மதுரை ஜெய்ஹிந்த்புரமம் சோலையழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் முத்துகருப்பன். இவரது ஒரு வயது பெண் குழந்தை கவி பிரியா. இவர் குழந்தையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். குழந்தையை முன்னாள் அமர வைத்து தெற்கு வாசல் என். எம்.ஆர். பாலத்தில் ஓட்டிச் சென்றார்.

அப்போது திடீரென்று பிரேக்கை போட்டதால் வண்டி நிலை தடுமாறியது. இதில் ஒரு வயது குழந்தை கவிப்பிரியா தவறி கீழே விழுந்தது..இதில் குழந்தைக்கு தலையில் பலமாக அடிபட்டது. உயிருக்கு போராடி மயங்கிய நிலையில் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் கார்த்திகை செல்வி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News