தேய்பிறை பஞ்சமி: வராஹியம்மனை வழிபட்ட திரளான பக்தர்கள்

மதுரை அண்ணா நகர் மேலமடை அருள்மிகு, சௌபாக்கிய விநாயகர் கோவிலில் வராஹியம்மனுக்கு வழிபாடு நடைபெற்றது;

Update: 2023-08-06 10:00 GMT

மதுரை மேலமடை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமி, வராஹியம்மனுக்கு நடைபெற்ற பூஜைகள்.

தேய்பிறை பஞ்சமி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை  நடைபெற்றது

மதுரை அண்ணா நகர் மேலமடை அருள்மிகு, சௌபாக்கிய விநாயகர் கோவிலில், தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, வராகி அம்மன் சந்நிதியில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

இத் திருக்கோவிலில், மாதந்தோறும் தேய்பிறை மற்றும் வளர்பிறை பஞ்சமி நாட்களில் காலை 9 மணி அளவில் வராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமங்களும் அதைத் தொடர்ந்து, பால், இளநீர், சந்தனம், மஞ்சள் பொடி போன்ற அபிஷே திரவியங் களால், சிறப்பு அபிஷேகம், மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் சார்பில் அர்ச்சனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து,  கோயில் நிர்வாகத்தின் சார்பில், பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதேபோன்று ,மதுரை அண்ணாநகர் யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வராகி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். மேலும், வர சித்தி விநாயகர் ஆலயத்திலும் தேய்பிறை பஞ்சமி விழா நடைபெற்றது.

மதுரை அண்ணாநகர் வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில், உலக நன்மைக்காக, திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை, ஆலய அர்ச்சகர் காந்தன், நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News