மதுரை மண்டலத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் திடீர் ஆய்வு

அரசு மதுபானக் கடைகளில் மேலாண்மை இயக்குநர் ஆய்வு செய்து 8 பேரை பணியிடை நீக்கம் செய்தார்;

Update: 2023-09-09 16:00 GMT

மதுரை மண்டலத்தில் அரசு மதுபான கடைகளில், மேலாண் இயக்குனர்  விசாகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

மதுரை மண்டலத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக மதுவை விலக்கிவிட்ட எட்டு பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ். விசாகன், தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, மதுரை மாவட்டத்தில், 15 மதுபானக்கடைகள் ஆய்வு செய்யப் பட்டதில், 6 கடைகளில், மதுபானக் கடைகளில் கூடுதலாக மதுவை விற்பனை செய்ததாக, 6 விற்பனையாளர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இரண்டாவது நாளாக, 15 மதுபானக் கடைகளில், சோதனை செய்யப்பட்டு, கண்ணன், முருகேசன் ஆகிய இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.மதுபாட்டிலுக்கு, கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்பட்டு வந்தது, ஆய்வின் போது தெரிய வந்தது.

டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ச.விசாகன், இரண்டாவது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டார். நேற்று மேற்கோண்ட ஆய்வில், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்த 6 நபர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்னர்.

இன்று மேலாண்மை இயக்குனர், மேற்கொண்ட ஆய்வில், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்த இரண்டு நபர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர் மேலும், 11 கடை பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News