மதுரையில் தமிழக முதல்வர் பிறந்த நாள்: இனிப்பு வழங்கிய கொண்டாடிய திமுகவினர்
மதுரை மாநகர் மாவட்டம் சம்மட்டிபுரம் பகுதி கழகத்தின் சார்பாக, வார்டு எண் 65, 70 ஆகிய வார்டுகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கல்;
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மரக்கன்று நட்டு இனிப்புகள் வழங்கிய திமுக நிர்வாகிகள் கொண்டாடினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1-ம் நாள், தனது எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.ஆட்சிக்கு வந்த 20 மாத காலத்துக்குள் ஈடு இணையற்ற சாதனைகளைச் செய்து இந்தியாவில் தலைசிறந்த முதல்வர்களில் தலைசிறந்தவராக மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்பதைப் பார்த்து நித்தமும் நான் வியந்து நிற்கிறேன். இளம்வயதில் துள்ளித் திரிந்து 'முரசொலி' நாளிதழ் பணிகளைச் செய்து வந்தார்.
கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை தானே உருவாக்கி, அதன் மூலமாக அந்த வட்டாரத்தில் சமூகப் பணிகளை ஆற்றினார். இயல்பிலேயே பிறந்த கலையார்வத்தின் காரணமாக நாடக மேடைகளில் தோன்றி நாடு முழுக்க பரப்புரை நாடகங்களை நடத்தினார். சென்னை மாவட்டக் கழகத்தின் தூணாக வளர்ந்தார். நிர்வாகப் பணிகளில், சென்னை மாநகரத்தின் வணக்கத்துக்குரிய மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, துணை முதலமைச்சராக வளர்ந்து இன்று முதல்வராக உயர்ந்து நிற்கிறார். ஆட்சிப்பணியாக இருந்தாலும், கட்சிப்பணியாக இருந்தாலும் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, இன்றைய உயர்வுகள் அனைத்தையும் பெற்றவர் மு.க.ஸ்டாலின் என திமுகவின் மூத்த முன்னேடிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதன், தொடர்ச்சியாக, மதுரை மாநகர் மாவட்டம், சம்மட்டிபுரம் பகுதி கழகத்தின் சார்பாக, வார்டு எண் 65, 70 ஆகிய வார்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிறந்த தினத்தை முன்னிட்டு, சம்மட்டிபுரம் பகுதி கழகச் செயலாளர் கே .தவமணி கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், வட்டக் கழகசெயலாளர்கள் பாலாஜி, பாலசிவகுமார் மற்றும் பகுதிகழக நிர்வாகிகள் சுசிசெல்வம், அ. மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்ன்ர, வார்டு எண் 70 அவைத்தலைவர் பொன்ராமசாமி தலைமையில், சொரூப் நகர் பூங்காவில் 70 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கே. தவமணி, ஏ .மூர்த்தி, கே. தனசேகர் ,ராயல் சீனிவாசன் ,என். சேதுராமநாதன் ,கே. திருப்பதி மற்றும் மதுரை மாநகர் முன்னாள் காவல்துறை உதவி ஆணையாளர் கணேசன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.