மதுரையில் மு.க. அழகிரியின் பிறந்தநாளைக் கொண்டாடிய ஆதரவாளர்கள்
இரண்டு வருடங்களாக அரசியலில் அமைதி காத்து வரும் அழகிரியின் பிறந்த தின விழாவை இந்த வருடம் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர்;
பிறந்த நாளின்போது மு.க.அழகிரிக்கு என்று தனிக் கூட்டம் உள்ளதாக அவ்வப்போது அடையாளம் காட்டி வரும் அழகிரி ஆதரவாளர்கள்.
முன்னாள் தமிழக முதல்வரும் தி.மு.க.தலைவருமான கலைஞர் மகன் மு.க .அழகிரியின் பிறந்தநாள் விழா ஜனவரி 30ஆம் தேதி மதுரையில் உள்ள அழகிரி ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டது. பத்து வருடங்களுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது அழகிரியின் பிறந்தநாள் விழா என்றாலே மதுரை முழுவதும் திருவிழா போல கொண்டாடப்படுவது வழக்கம்
ஆனால், இரண்டு வருடங்களாக அரசியலில் அமைதி காத்து வரும் அழகிரியின் பிறந்த தின விழாவை இந்த வருடம் அவரது ஆதரவாளர்கள் சிறப்பாக கொண்டாடினர்.மதுரை மாநகர் முழுமைக்கும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், இலவச வேட்டி, சேலை கல்வி உதவிகள் என வழங்கினார்கள்.
அதன் ஒரு நிகழ்வாக மதுரை ஜீவா நகர் பகுதியில் மு.க. அழகிரி பேரவை நிர்வாகிகள் முருகன் மற்றும் பரமசிவம் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் மதுரை முனிச்சாலை பகுதியில் அழகிரியின் ஆதரவாளர் சேட் (எ) முகமது உசேன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்டங்களை வழங்கி அழகிரியின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவில் அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன் எம்.எல்.ராஜ்,முபாரக்மந்திரி, கோபிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களையும் இனிப்புகளையும் வழங்கினார்கள்.