மதுரை சோழவந்தான் அருகே வயலில் நெற்பயிர் நடவு செய்து அசத்திய மாணவிகள்

மதுரை சோழவந்தான் அருகே வயலில் நெற்பயிர் நடவு செய்து மாணவிகள் அசத்தி உள்ளனர்.

Update: 2024-08-08 08:45 GMT

சோழவந்தான் அருகே வயலில் நடவு செய்த திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக மாணவி.

சோழவந்தான் அருகே காந்தி கிராம மாணவிகள் விவசாய நிலத்தில் தென்னை மரக்கன்று நடுதல் மற்றும் நெல் வயலில் நாற்றங்கால் நடவு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவிகள் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, தென்கரை கிராமத்தில் தங்கி இருந்து கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

குறிப்பாக பயிர் சாகுபடி, உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி அளித்து வருகின்றனர். இதன்படி, விவசாயி ரெங்கன் தோட்டத்தில் தென்னை கன்று நடவு முறைகளையும், எவ்வாறு தென்னை கன்றுகளை தேர்ந்தெடுப்பது என்பது பற்றியும் மேலும் இதன் பராமரிப்பு முறைகளில் விவரித்து விவசாயிகளிடம் எடுத்து கூறினர். விவசாயிகளும் பயிற்சி மாணவிகளும் சேர்ந்து தென்னை கன்றுகளை வாழை தோட்டத்தின் இடையில் ஊடுபயிராக நடவு செய்தனர்.

இதே போல், தென்கரை விவசாயி கார்த்திகேயன் நிலத்தில் ஆர். என். ஆர். ரக நெற்பயிர்களை நாற்றங்காலில் மாணவிகள் பேராஜெஸிந், இந்திராணி, கோமுகி, முத்துலட்சுமி, பபிதா ஆகியோர் நடவு செய்தனர்.

Tags:    

Similar News