வாடிப்பட்டியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாண்டையார் பிரசாரம்..!
தங்க தமிழ்ச்செல்வனை 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஸ்ரீதர் வாண்டையார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாடிப்பட்டி, ஏப்.15-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில், தேனி நாடாளுமன்ற தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் வாக்கு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:-பேரன்பு மிக்க பெரியோர்களே தாய்மார்களே வாக்காள பெருமக்களே நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நமது இந்திய கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு நாங்க எல்லாம் இங்கே வருகை தந்துள்ளோம். மத்தியில் பத்தாண்டு காலமாக தமிழகத்தை வஞ்சிக்கக்கூடிய ஆட்சியாக விரோதமான விளையாட்டு ஸஷஷௌ ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. அதை நீக்கிவிட வேண்டும், அதேபோல் ,பாரத பிரதமராக இருக்கின்ற மோடி அவர்கள் இதற்கு மேல் நீடிக்கக் கூடாது.
இந்திய கூட்டணி ஆட்சியை அமைத்து அன்புக்குரிய பாசத்துக்குரிய காங்கிரஸ் தலைவர்களின் முன்னணியில் இருக்கின்ற ராகுல் காந்தி அவர்கள் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என்று, அதனால் உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு அளிக்க வேண்டும் என்று, அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் நம் தேவர் சமுதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பல நல்லதுகளை செய்தவர் முத்தமிழ்'அறிஞர் கலைஞர்ட்சியில் 68 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்தார்,
நமது சமுதாயத்துஇக்கு மட்டுமல்ல 68 சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது தி.மு.க அரசு தான். இந் ததொகுதியில் அ.ம.மு.க சார்பாக போட்டியிடும் தினகரன் தஞ்சாவூர் தொகுதியில் நின்றால், தோல்வியடைந்து விடுவோம் என்று பயந்து இங்கே வந்து நிற்கிறார் அவரிடம் பணம் இல்லை அவரை நம்பி கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட 40 பேரும் கடன்காரராகி ஆகிவிட்டனர்.
இந்த பகுதியிளும் அதே போல் டோக்கன் கொடுப்பார் வாக்குறுதி கொடுப்பார் ஆனால எதுவும் செய்ய முடியாது வெற்றி பெற முடியாது. இந்தியா கூட்டணி தான் 40 தொகுதிகளிலும் 3 லட்சம் வாக்குக்கும் குறைவில்லாமல் இறுதியாக வெற்றி பெறவும்.பெறும். அண்ணா தி.மு.க பிரிந்து விட்டது. அதில், பிரதமர் வேட்பாளர் யாருமில்லை. இஸ்லாமிய வாக்குகளையும் கிறிஸ்த வாக்குகளையும்பிரிப்பதற்காக 40 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். பிஜேபி கூட்டணி நிச்சயம் தோல்வியடையும்.
டி.டி.வி தினகரனுக்கு சென்னையில் தான் வீடு உள்ளது. அதனால், அவர் தேர்தலுக்குப் பின் சென்னைக்கு சென்று விடுவார். உங்களில் ஒருவர் தங்கத்தமிழ் செல்வம்தான் வெற்றி அடைவார்.தொகுதியில் எல்லா நன்மையையும் செய்யக் கூடியவர் எப்போது வேண்டு
மானாலும் ,போய் சென்று பார்க்கும் அளவுக்கு இங்கேயே இருப்பவர். இரவு பகல் பாராமல் உழைக்கக் கூடியவர் உங்கள் குறைகளை எல்லாம் கேட்பவர் தங்க மனம் படைத்த தங்க தமிழ்ச்செல்வன் தான் அதனால், உங்களுடைய பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆறு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
தேர்தல் முடிவின் போது சோழவந்தான் தொகுதியில் தான் அதிக வாக்களித்த தொகுதியாக இருக்க வேண்டும் என்று வேண்டிகேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரசாரத்திற்கு வெங்கடேசன் எம். எல். ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூர் செயலாளர் மு..பால் பாண்டியன், ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில பொருளாளர் கே. என். நாகராஜன், மாவட்டச் செயலாளர் : செந்தில் பாண்டி, காங்கிரஸ் கமிட்டி நகரத் தலைவர் முருகானந்தம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ,பொதுமக்கள் வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.