மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

மதுரையில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடத்தப்பட்டது.

Update: 2021-12-08 14:54 GMT

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், கலந்து கொண்ட 45 மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், கலந்து கொண்ட 45 மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.

மதுரை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவ்வலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனம் மூலம் பணி வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதிகளுக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களிடம் பணி பெற்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்று (08.12.2021) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடத்தப்பட்டது.

அதில் ,7 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. தனியார் நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளிடம் நேர்காணல் நடத்தி அதில், தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பணி நியமனங்களை வழங்கினார்கள். இம் முகாம் மூலம், மொத்தம் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.

மேலும், மாவட்ட தொழில் மையம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு தேவையான பயிற்சிகளும், வழிகாட்டுதல்களும் இம்முகாமில், வழங்கப்பட்டது. இதில், தகுதியானவர்களுக்கு வங்கி மூலம் கடன் பெற்று சுய தொழில் புரிய மாற்றுத்திறனாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவி மற்றும் தனியார் நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News