டிவியை அலறவிட்டதை கண்டித்த தந்தையை பாட்டிலால் தாக்கிய மகன் கைது
மதுரையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்;
டிவியில் அதிகம் சப்தம் வைத்ததை கண்டித்த தந்தைக்கு பாட்டிலால் தாக்கிய மகன் கைது
மதுரைஆரப்பாளையம் கீழ மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி(52.) இவரது மகன் முத்துராஜா .சம்பவத்தன்று அதிக சப்தமாக வைத்து மகன் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் .இதை தந்தை மலைச்சாமி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் முத்துராஜா, பாட்டிலை உடைத்து தந்தையை தாக்கினார். இந்த சம்பவ குறித்து மலைச்சாமி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை பாட்டிலால் தாக்கிய மகனை கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் கத்தி முனையில் வழிப்பறி -இரண்டு வாலிபர்கள் கைது
மதுரை செக்கானூரணி உசிலம்பட்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் கணேசன்(57 ).இவர் மதுரை திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் விவசாய பொறியியல் துறை அலுவலகம் பின்புறம் சென்றார்.அவரை இரண்டு வாலிபர்கள் வழிமறித்தனர். அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ 370ஐ வழிப்பறி செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கணேசன் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு மகேஸ்வரன் மகன் சந்தோஷ் குமார்(27), ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் முதல் தெரு வள்ளுவர் தெரு சங்கையா மகன் தக்ஷிணாமூர்த்தி( 27 )ஆகிய இரண்டு வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் சின்ன கருப்பன் சந்து வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(41.). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் அதுபோல் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மணமுடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்குறித்து மனைவி பாண்டிச்செல்வி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தல்லாகுளத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
பீ.பி. குளம் லால்பகதூர் சாஸ்திரி ரோடைசேர்ந்தவர் பார்த்தசாரதி 42. இவருக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் பீ.பி.குளத்தில் உள்ள அப்பார்ட்மெண்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி ரேவதி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்தசாரதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரைத்துரையில் குடிபோதையில் தாயை தாக்கிய மகன் கைது
மதுரை கீரைத்துரை கோதண்டராமன் மில் ரோட்டை சேர்ந்தவர் ஸ்டெல்லா ராணி 65. இவருடைய மகன் பெஞ்சமின் அருண் தங்கராஜ் என்ற குட்டன்( 25.) மகனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதை தாய் கண்டித்ததால் ஆத்திரமடைந்து எடுத்து தாயை மிரட்டியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து தாய் ஸ்டெல்லா ராணி கொடுத்த புகாரில் கீரைத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து மகன் பெஞ்சமின் அருண் தங்கராஜை கைது செய்தனர்.
ஜெய்ஹிந்த்புரம் தேவர் பாலம் அருகே வாளுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது
மதுரை ஜன 21 ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாதவன்.இவர் ரோந்துப்நணியில் ஈடுபட்டிருந்தார். தேவர் பாலம் அடியில் ரயில்வே ட்ராக் அருகே சென்றபோது சந்தேகப்படும்படியாக பதுங்கிய வாலி வரை பிடித்தார். அவரிடம் சோதனை செய்தார். அவர் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார் விசாரணையில் ஜெய்ஹிந்த்புரம் ராஜகோபால் மகன் பாலமுருகன் என்ற பஞ்சாயத்து பாலா 27 என்று தெரியவந்தது. அவர் அந்த பகுதியில் வருவோரை மிரட்டி கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்த வாளையும் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து ஆபாசமாக பேசி மிரட்டிய மர்ம நபர்
மதுரையில் தல்லாகுளம் காவல் நிலைய தலைமை காவலர் ஜீவானந்தம். இவர் பணியில் இருந்த போது காவல் நிலையத்திற்கு தொலைபேசி ஒன்று வந்தது. தொலைபேசியை எடுத்து அவர் பேச தொடங்கியதும் மறுமுனையில் இருந்த நபர் அவரையும் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளையும் மற்றும் உயர் அதிகாரிகளையும் கண்டபடி ஆபாசமாக பேசி திட்டியுள்ளார் இதை தொடர்ந்து தலைமைக்காவலர் ஜீவானந்தம் அவரிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்த போது சுதாரித்துக்கொண்ட அந்த ஆசாமி இணைப்பை துண்டித்து விட்டார். பின்னர் தொலைபேசி எண்ணை வைத்து பேசியது யார் என்று அறிய போலீசார் முயற்சி செய்தனர். அதில் பேசியவர் கரந்தமலை கண்ணன் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையில் டாஸ்மார்க் கடை அருகே கஞ்சா விற்பனை மூன்று பேர் கைது
மதுரை கே புதூர் பாரதியார் ரோட்டில் டாஸ்மார்க் கடை உள்ளது. இதன் பின்புறம் கஞ்சா விற்பனை செய்வதாக கே.புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து அங்கு கஞ்சா விற்பனை செய்த கே புதூர் மூன்று மாவடி பரசுராம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பூவரசன்( 27,), கூடல் புதூரைச் சேர்ந்த முருகைய்யன் மகன் சண்முகசுந்தரம்( 37 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 400 கிராம் கஞ்சாவையும் விற்பனை செய்த பணம் ரூ 600 ,இரண்டு பைக்குகள், செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர் .
தத்தனேரி சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்வதாக செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த தத்தனேரி ராஜீவ் காந்தி ஐந்தாவது தெருவை சேர்ந்த சசிகுமார் மகன் அழகர்(21) என்ற வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.