மதுரை பகுதி கோயில்களில் சோமவார பிரதோஷ விழா

சோமவார பிரதோஷ விழாவில் கொட்டுமழையையும் பொருட் படுத்தாமல் பக்தர்கள் பங்கேற்றனர்;

Update: 2023-08-29 04:15 GMT

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில் நடைபெற்ற சோமவார பிரதோஷம்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளய நாதசிவன் கோவிலில் சோமவார பிரதோஷம் விழா நடைபெற்றது.

மதுரை அருகே சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ,சோமவார பிரதோஷ விழா நடந்தது.பிரசித்தி பெற்ற சோழவந்தான் பிரளயநாத (சிவன்) கோவிலில் சோமவாரபிரதோஷ விழா நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு, நந்திபெருமானுக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. எம்விஎம் குழுமத்தலைவர் மணிமுத்தையா,கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன்,மற்றும் கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதையொட்டி நடந்த அன்னதான நிகழ்வில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் சோமவார பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சிறப்புஅர்ச்சனை,பூஜைகள், தீபாரதனை நடந்தது பிரதோஷ கமிட்டினர் பிரசாதம் வழங்கினர்.இதேபோல் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவில்  அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், வரசித்து விநாயகர் ஆலயம் , அண்ணாநகர் வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயம்,

மற்றும் திருமங்கலம் மீனாட்சி திருக்கோவில் அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தோரிமான் சிவன் ஆலயம் ஆகிய ஆலயங்களிலும் சோமவார பிரதோஷ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் பிரதோஷ தினத்தன்று ஆங்காங்கே மழை பெய்தது, பக்தர்களை மகிழ்ச்சிஆழ்த்தியது.

Tags:    

Similar News