மதுரையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வழிகாட்டி மனிதர் அறக்கட்டளையினர்

Social Trust Guided To Students மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், சிம்மக்கல் கஸ்தூரிபாய் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2024-02-06 14:22 GMT

மாணவர்களை ஊக்கப்படுத்தும், வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள்.

Social Trust Guided To Students

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், சிம்மக்கல் கஸ்தூரிபாய் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த பள்ளி மாணவிகள் கல்வித்துறை நடத்திய மாநில மாவட்ட அளவில் வினாடி வினா, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்திறன் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.

இவர்களை, ஊக்கப்படுத்தும் வகையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார்.அவர் கூறுகையில்:

கல்வி என்பது ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை. எனவே மாணவ, மாணவிகள் அனைவருமே திட்டமிட்டுபடிக்க வேண்டும். திட்டமிடும் எந்த செயலும் வெற்றியைத் தரும். அந்த வகையில் கல்வியை நாம் திட்டமிட்டு படிக்கும்போது  நாம் தேர்வில் நல்ல மதிப்பெண்களை நிச்சயமாக பெறலாம். 

தேர்வு காலம் நெருங்குவதால் அனைத்து மாணவிகளும் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும். கல்வியில் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் தங்களின் தனித் திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ் நாளில் சாதனையாளர்களாக உயர வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை முருகேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழுவின் நிர்வாகிகள் இல.அமுதன், முருகன், சமூக ஆர்வலர் ரமேஷ்குமார், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News