மதுரை அருகே கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபாராதம்
கொரோனா விதிமுறைகளை மீறி அந்நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணியாததுடன் தனி மனித இடைவெளியை மீறியிருந்தனர்;
மதுரை பழங்காநத்தம் அருகேயுள்ள தனியார் வணிக நிறுவனத்தில் ஆய்வு செய்து அபராதம் விதித்த வருவாய்த்துறையினர்
மதுரையில் கொரோனா விதி முறைகளை கடைபிடிக்காத சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு வருவாய்த் துறையினர் அபராதம் விதித்தனர்.
மதுரையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மதுரை பழங்காநத்தம் அருகே திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள சரவணா செல்வரத்தினம் நிறுவனத்தில், திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதா, வட்டாட்சியர் சரவணன்,வருவாய் ஆய்வாளர் ராமர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கொரோனா விதிமுறைகளை மீறி அந்நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படாமலும் இருந்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் 5,000 ரூபாய் அபராதம் விதித்தார்.