மதுரை அருகே காரில் கடத்திய குட்கா பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது

மதுரை அருகே காரில் கடத்திய குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து இருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-10-20 16:43 GMT

காரில் கடத்திய குட்கா பொருட்களுடன் கைதான இருவர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து- மதுரை மாவட்டம், வில்லூருக்கு, குட்கா பொருட்கள் விற்பனைக்காக காரில் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிட்டியது.

இதனையடுத்து, மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி., வே. பாஸ்கரன் ஆலோசனையின் பேரில், கள்ளிக்குடி போலீஸார், குட்கா கடத்தி வந்த காரை மடக்கி சோதனையிட்டதில், காரில் கடத்தி வந்த 200 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும், கடத்தி வந்ததாக சாத்தூரைச் சேர்ந்த கேசவப் பெருமாள் வயது 23., விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜ். வயது. 40 .ஆகியோரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News