மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம்
மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.;
மதுரை மாநகர் எஸ்.டி.பி.ஐ. கட்சி தெற்கு மாவட்டம் சார்பில், மகபூப் பாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. மாவட்டத் தலைவர் சீமான் சிக்கந்தர். மாவட்ட பொதுச் செயலாளர் ஹாகுப்ஹமீது தலைமை வகித்துதுவக்கி வைத்தனர். ஊடகப் பிரிவு தலைவர் இப்ராஹிம்ஷா பாபுஜி முன்னிலை வகித்தார்.தொகுதித் தலைவர் பகார் வரவேற்றார்.
முகாமில் ,பல் மருத்துவம், பொது மருத்துவம் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் ரியாஸ் பாத்திமா, ஹாஜிரா பாத்திமா ஆகியோர் சிகிச்சை அளித்தனர். அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், கண் நோய்களுக்கு பரிசோதனை செய்தனர்.