மதுரை அருகே பாலமேட்டில் சமத்துவ மக்கள் கட்சி கூட்டம்
உறுப்பினர் அட்டை இல்லாத கட்சியினர் உறுப்பினர் அட்டையை தொகுதி பொறுப்பாளரிடம் கேட்டு பெற வேண்டும்;
இந்தக் கூட்டத்திற்கு, மாநில தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சுந்தர தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணை செயலாளர் குதிஸ்திவாகர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினரும் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: நமது தலைவர் சரத்குமார் ஆணைக்கிணங்க, மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இங்கு வந்திருக்கும் அனைவரும் தலைமைக்கு கட்டுப்பட்டு சிறப்பாக செயல்பட வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு செய்திகள் அதையும் தாண்டி இனிவரும் 2024 பாராளுமன்றத் தேர்தலாய் இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாய் இருந்தாலும் மிகப் பெரிய இலக்கை அடைய வேண்டும் என்ற ஒரே கோட்டில் பயணித்தால் மட்டும் வெற்றி பெற முடியும். நிர்வாகக் கட்டமைப்பை சரி செய்யும் வேலைகளையும் செய்து கொண்டு வருகிரோம். தங்கள் அனைவரது சட்டை பாக்கெட்டிலும் நமது தலைவர் சரத்குமார் படம் வைத்துக்கொள்ள வேண்டும். உறுப்பினர் அட்டை இல்லாத நமது கட்சியினர் உறுப்பினர் அட்டையை தொகுதி பொறுப்பாளரிடம் கேட்டு பெற வேண்டும் என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது.மத்திய மாவட்டச் செயலாளர் புறாமோகன், உசிலம்பட்டி தொகுதி செயலாளர் சிவமுருகன், ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, வடக்கு மாவட்டச்செயலாளர் பாலமேடு எம்.டி. கார்த்திக், செய்திருந்தார். மாவட்ட ,ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..