சாலையில் சிதறும் கற்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம்: சமூக ஆர்வலர்கள் வேதனை
தார்பாய் இன்றி, செங்கல், மணல், கற்கள் கொண்டு செல்லும் லாரிகள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்;
சாலையில் ஜல்லி கற்களை கொண்டு செல்லும் போது சிதறிச்செல்லுமம் வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
மதுரை அருகே, கூத்தியார்குண்டு நான்கு வழிச்சாலையில், சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி, பலமுறை ஜல்லி கற்களை, இதுபோன்று நடு ரோட்டில் சிதறி விட்டு செல்கின்றனர். இதனால், வாகன விபத்து ஏற்பட நேரிடும், இதில் கவனம் செலுத்த வேண்டுமென ஆஸ்டின்பட்டி காவல் துறையினரால் பலமுறை அறிவுறுத்தப்பட்டும், சிமெண்ட் கலவை தயாரிக்கும் நிறுவனம் செவி சாய்க்கவில்லை என கூறப்படுகிறது.
சாலையில் கற்களை கொண்டு செல்லும் போது, ஜல்லி கற்கள் சிந்துவதால், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், சாலையில் சறுக்கி நிலைதடுமாறும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே , இதற்கு காரணமாக உள்ள அந்த நிறுவனத்தின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து அபராதம் விதித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், மதுரை புறநகர் பகுதிகளில், பல ஊர்களில் லாரிகளில் தென்னை மட்டை, குவாரிகளிலிருந்து ஜல்லிக் கற்கள், ஜல்லி தூசிகள், மண்கள் ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்பாய் போட்டு மூடாமல் கொண்டு செல்வதால், லாரிகள் பின்னால் எந்த வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாத வகையில் தூசி பறப்பதுடன், சாலையில் கற்கள் சிந்தி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, மதுரை நகர், புறநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள், லாரிகளில் தார்பாய் இன்றி, செங்கல், மணல், கற்கள் கொண்டு செல்லும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.