அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை
மதுரை மாநகராட்சி,சோழவந்தான் அரசு மருத்துவமனைகளின் நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது;
சோழவந்தான் அரசு மருத்துவமனையில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மாவட்டம் ,சோழவந்தான் அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து கொண்டே வரும் சூழ்நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி காலையில் 1000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் நோயாளிகள் சீட்டு.பதிந்து அதன் பின்பு மருத்துவரை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் பதிவு செய்யும் இடத்தில் தினசரி கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் நிற்க முடியாமல் மருத்துவமனை படிக்கட்டுகளில் அமர்ந்து ஓய்வெடுக்க வேண்டிய அவல நிலையும் உள்ளது. ஆகையால் நோயாளிகள் மற்றும் வயதானவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சீட்டு பதியும் இடத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து நோயாளிகள் சிரமப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதேபோல், மதுரை மாநாகராட்சியில்... மதுரை மஸ்தான்பட்டி, கபீர் நகரில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தினசரி வரும் நோயாளியின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இம் மருத்துவமனையில், கூடுதலாக மருத்துவர் மற்றும் செவிலியர்களின் நியமிக்க மதுரை மாநகராட்சி சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மட்டும் பணியில் இருப்பதால், நோயாளிகள் பல மணி நேரம் மருத்துவ சிகிச்சைக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. மற்றும் ரத்த அழுத்தம் பதிவு சீட்டுகளை பதிவு செய்வதற்கும் போதிய மருத்துவ பணியாளர் இல்லாததால், வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆகவே, கூடுதலாக மருத்துவம் மற்றும் செவிலியர் நியமிக்க மதுரை மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.