மதுரை நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை
மதுரை நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது.;
மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பகலில் வெப்பம் தணிந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இன்று மாலை, திடீரென பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், மதுரை நகரில் பல இடங்களில் வெப்பக்காற்று பதிலாக குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.
சாலைகளில் மழைநீர் வழிந்து ஓட வழியின்றி, மதுரை மேலமடை தாசில்தார் நகர் வீரவாஞ்சி தெரு, ஜீப்பிலி டவுன் தாழை வீதி, திருக்குறள் வீதிகளில், நகர் பகுதியில் மழைநீர் சாலையில் தேங்கி குளம் போல காட்சியளித்தன.