மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கல்
கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.;
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 99வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத்தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவிகளை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். பிறகு மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், துணை மேயர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.