மதுரையில் வீரன் சுந்தரலிங்கம் சிலை வைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
மதுரை விரகனூர் சுற்றுச்சாலை ரவுண்டானாவில் வீரன் சுந்தரலிங்கம் சிலை வைக்கக்கோரி, ஆர்ப்பாட்ட ம் நடைபெற்றது.;
வீரன் சுந்தரலிங்கம் சிலை வைக்கக்கோரி, தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் உள்ள ரவுண்டானாவில், சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் முழுஉருவ வெண்கலச் சிலை அமைக்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், இன்று தேவேந்திர குல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அச்சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.