தமிழக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!
மின்கட்டண உயர்வைக்கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் முன்பு, அ.இ.அண்ணா.திமு.கழகம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும்,கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கினங்க தி.மு.க அரசைக் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில், எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி கழகச் செயலாளரும் வழக்கறிஞருமான ரமேஷ் தலைமை தாங்கினார். தி.ப.கு .ஒன்றியச் கழக செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.தி.ப.கு. சட்டமன்ற உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளரும் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான, ராஜன் செல்லப்பா ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க அரசின் 3 வது முறையாக உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை திரும்பப்பெறக் கோரியும், நியாய விலைக் கடைகளில் பாமாயில் ,பருப்பு விநியோகத்தை நிறுத்த முயற்சி செய்வதை கண்டித்தும், கோஷங்கள் எழுப்பினர். கழக தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், புறநகர் எம்.ஜி.ஆர் கிழக்கு ஒன்றியச் செயலாளர்கள் சிட்டம் பட்டி பாண்டி, கணேஷன், எம்ஜிஆர் புறநகர் மன்றத்தலைவர் பழனியப்பன், எம்.ஜி.ஆர்மன்ற இணைச் செயலாளர்கள் கணேஷ் மூர்த்தி, ராஜேந்திரன், நரசிங்கம் ஒன்றிய கவுன்சிலர் பிரசன்னா, யோகராஜன், விஷ்ணு, வேல், துரை, சிதம்பரம் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.