பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: மேயர் உத்தரவு

சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரருக்கு பெயர் மாற்றத்திற்கான அனுமதி ஆணையினை மனுதாரருக்கு மேயர் வழங்கினார்.;

Update: 2023-04-19 12:00 GMT

பைல் படம்

மதுரை மாநகராட்சிக்கு பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேயர் இந்திராணி பொன்வசந்த் உத்தரவு.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்து வரி பெயர் மாற்றம் தொடர்பாக 11 மனுக்களும், புதிய வரி விதிப்பு வேண்டி 4 மனுக்களும், சொத்து வரி திருத்தம் தொடர்பாக 21 மனுக்களும், குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் புதிய பாதாளச்சாக்கடை இணைப்பு வேண்டி 19 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 18 மனுக்களும், சுகாதார வசதி வேண்டி 3 மனுக்களும், இதர கோரிக்கை வேண்டி 1 மனுவும் என மொத்தம் 77 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மேயர் நேரடியாக பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மேயர் உத்தரவிட்டார். மேலும், இம்முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரருக்கு பெயர் மாற்றத்திற்கான அனுமதி ஆணையினை மனுதாரருக்கு மேயர் வழங்கினார்.

தொடர்ந்து, மண்டலம் 3 வார்டு எண்.75 ஜெய்ஹிந்துபுரம் வெங்கடாசலபுரம் பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை பணிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளையும், சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாகவும், மேயர், ஆணையாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, உதவி ஆணையாளர் மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் சேகர், சுகாதார அலுவலர் வீரன், உதவி வருவாய் அலுவலர்  லோகநாதன், உதவி பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News