மதுரையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம்: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

மொத்த குடும்ப அரிசி அட்டைதாரர்களில் 43 % குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன

Update: 2022-01-08 15:00 GMT

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நியாய விலைக்கடைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நியாய விலைக்கடைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர் நேரடியாக சென்று  ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், சரோஜினி நகரில் உள்ள நியாய விலைக்கடை மதுரை தல்லாகுளம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு அருகிலுள்ள நியாய விலைக்கடை மற்றும் பசுமலை பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடை ஆகிய மூன்று நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படும் பணிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் நேரடியாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் ஆட்சியர் மேலும் கூறியதாவது: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட, அரிசி பருப்பு, முந்திரி, திராட்சை, வெல்லம் ,கரும்பு மற்றும் மஞ்சள் பை உட்படரூ.505 மதிப்பிலான 21 வகையான மளிகைப் பொருட்களை உள்ளடக்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் விழாவினை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் 1394 நியாய விலைக்கடைகளில் உள்ள 9 இலட்சத்து 17 ஆயிரத்து 537 குடும்ப அட்டைதார்களுக்கும இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்துவரும் ஆயிரத்து 718 குடும்ப அட்டைதாரர்களுக்கும் சேர்த்து ஆக மொத்தம் 9 இலட்சத்து 19 ஆயிரத்து 255 குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு 46 கோடியே 42 இலட்சத்து 23 ஆயிரத்து 775 ரூபாய் மதிப்பில் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 9 இலட்சத்து 19 ஆயிரத்து 255 குடும்ப அரிசி அட்டைதாரர்கள் உள்ளனர். இவற்றில் 3 இலட்சத்து 96 ஆயிரத்து 523 குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைப்பதற்கு தேவையான பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்த குடும்ப அரிசி அட்டைதாரர்களில் 43 சதவிகித குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீதமுள்ள குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய்தொற்றின் நிலையான நடைமுறைகளை பின்பற்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முறைப்படுத்தும் வகையில் தெரு வாரியாக உள்ள அரிசி குடும்ப அட்டையின் எண்ணிக்கையின் அடிப்படையில் தினந்தோறும் சுழற்சி முறையில் சுமார் 150 முதல் 200 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து நியாய விலைக்கடைகளிலும், வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக தினந்தோறும் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களிடம் டோக்கன் வழங்குவதிலும் மற்றும் பொருட்கள் வழங்குவதிலும் குறைபாடு ஏதேனும் இருந்தால் துணைப்பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்.98429 28929-க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.

Tags:    

Similar News