தேனூர் கிராம தேவதை சுந்தரவள்ளி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக சேத்தாண்டி வேஷம் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அம்மனுடன் ஊர்வலமாக வந்தனர்;

Update: 2023-09-28 10:30 GMT

தேனூர் சுந்தரவள்ளி அம்மன் ஆலயத்தில் நடந்த பொங்கல் விழா.

மதுரை அருகே சோழவந்தான் அருகே தேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு சுந்தர வள்ளி அம்மன் சிறிய கோவிலில் இருந்து பெரிய கோவிலுக்கு அம்மன் வந்து சேர்தல். அங்கு பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து அக்னிசட்டி எடுத்து வந்தனர். மறுநாள் காலை அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி ஏழு கரைகாரர்கள் முன்னிலையில் சக்தி கிரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் வீதிஉலா நடைபெற்றது .

வழிநெடுக  பக்தர்கள் சார்பில் அம்மனுக்கு பூஜைகள் செய்து  பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கினர்.நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள்  சேத்தாண்டி வேஷம் மற்றும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அம்மனுடன் வந்தனர். இரவு அம்மன் பூப்பல்லாக்கில் எழுந்தருளி விடிய,விடிய பவனி  திருவீதி உலா வந்து அதிகாலையில்   சுந்தரவள்ளி அம்மன் கோவிலை வந்து சேர்ந்தது . விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். சமயநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

இதே போல பரவை முத்து நாயகி அம்மன் விழா நடைபெற்றது. கிராம மக்கள் பலர் சிறப்பு பூஜைகளை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய விழாக் குழுவினர், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News