மதுரை அருகே திருமங்கலத்தில் காவல் நிலையம் முற்றுகை: 30 பேர் கைது
Mahalakshmi Ashtakam in Tamil - காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 30 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்;
Mahalakshmi Ashtakam in Tamil -காவல்துறையினர் குறிப்பிட்ட சமூகத்தினர் மீது ஒருதலைப் பட்சமாக வழக்கு பதிவு செய்ததைக் கண்டித்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் காவல் நிலையம் முன்பு, குறிப்பிட்ட சமூகத்தினர் (அகமுடையார்)மீது மட்டும் வழக்கு தொடர்ந்ததாக கூறி , பாதிக்கப்பட்ட சமூகத்தினர் காவல்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 30 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.
திருமங்கலம் தெற்கு தெரு பகுதியில் உள்ள கோவில் முன்பு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த (தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தோர்) சிலர் மது அருந்தி கொண்டிருந்ததை , மற்றொரு சமூகத்தைச் (அகமுடையர்) சார்ந்த சிலர் கண்டித்ததால், இருவருக்கும் வாக்கு வாதம் , கைகலப்பு ஏற்பட்டதில் இரு தரப்பைச் சார்ந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, அடிதடியில் ஈடுபட்ட ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த 12 பேரை மட்டும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதனை கண்டிக்கும் வகையில் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் இரு தரப்பினர் மீதும் வழக்கு தொடுக்க வேண்டும் எனவும் , குறிப்பிட்ட சமூகத்திற்கு ஒரு தலை பட்சமாக காவல்துறை உடந்தையாக செயல்படுவதாக கூறி , காவல்நிலையத்தை முற்றுகையிட்டு காவல்துறையினரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால், மதுரை - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2