கைதுசெய்யப்பட்ட திருடனிடமிருந்து ஐந்தரை பவுன் நகை பறிமுதல்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் பகுதியில் திருடப்பட்ட ஐந்தரை பவுன் நகையை போலீஸார் மீட்டு திருடனை கைது செய்தனர்;
மதுரை மாவட்டம் சாப்டூர் காவல் நிலையத்துக்கு வண்டபுளி, ராமசாமி புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் லிங்க வேல் என்பவரின் வீட்டில் வைத்திருந்த 5 1/2 பவுன் நகைகளை யாரோ அடையாளம் தெரியாதவர் திருடி விட்டுச் சென்றதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் சாப்டூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்வி. பாஸ்கரன் மேற்படி காணாமல்போன நகைகளை உடனடியாக மீட்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சாப்டூர் காவல் நிலையத்தில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்தை விரல்ரேகை நிபுணர்களைக் கொண்டு சோதனை செய்யப்பட்டது. சோதனையில் சந்தேகத்திற்கிடமான விரல் ரேகைப் பதிவுகள் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்டது. பின்னர் இவ்வழக்கில் சந்தேக நபராக கருதப்பட்ட அணைக்கரைப்பட்டி ராமசாமி புரத்தைச் சேர்ந்த நாக பாண்டி மகன் முத்துராஜா என்பவரை பிடித்து விசாரணை செய்யப்பட்டது. பின்னர் அவரின் விரல் ரேகை பதிவு களை எடுத்து ஏற்கெனவே சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட விரல்ரேகை பதிவுடன் ஒப்பீடு செய்து பார்த்ததில் இரண்டும் ஒரே விரல்ரேகை பதிவு தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அடிப்படை அதனடிப்படையில் மேற்படி முத்து ராஜாவை கைது செய்து மேற்படி வழக்கில் திருடிய சுமார் ஐந்தரை பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது பின்னர் குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வழக்கில் துரிதமாகவும் விரைவாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி பாஸ்கரன் பாராட்டினார்..