நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி மதுரையில் போலீஸார் கொடி அணி வகுப்பு
மதுரை மாநகராட்சித்தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது;
மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மதுரை மாநகராட்சி தேர்தலையொட்டி மாநகர் எஸ்.எஸ். காலனி போலீஸ் சரகத்திற்கு உள்பட்ட எல்லீஸ் நகரில் இருந்து சம்மட்டிபுரம் வரை துணை கமிஷனர் தங்கதுரை, திலகர் திடல் உதவி கமிஷனர் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் ஆகியோர் தலைமையில், போலீஸ் அணிவகுப்பு இன்று நடைபெற்றது. இதேபோல், மதுரை கொன்னவாயன் சாலையிலிருந்து, ஆரப்பாளையம் வரை போலீசாரின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.