மதுரை பஸ் பயணியிடம் செல்போன் திருட்டு
மதுரையில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 7 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருட்டு:வாலிபர் கைது:
மதுரை, சூர்யா நகர் மீனாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் முருகன் மகன் மணி( 35. ) இவர், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஹோட்டல் அருகே சென்றபோது, அவரிடம் இருந்த செல்போனை வாலிபர்ஒருவர் பறிக்கமுயன்றார். அப்போது, அவரை கையும் களவுமாக பிடித்தனர்.பின்னர், அவரை மாட்டுத்தாவனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசர் குலத்தைச் சேர்ந்த முருகன் மகன் ராஜா 32. என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை சமட்டிபுரத்தில் வீடு புகுந்து நகை பணம் திருட்டு
மதுரை சம்மட்டிபுரத்தைச்சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி சந்திரகலா(37.). இவர், வீட்டில் குடும்பத்துடன் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீடு புகுந்த மர்மநபர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த மூன்று பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ 10 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டார் .இந்த திருட்டு குறித்து சந்திரகலா, எஸ். எஸ். காலனி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து நகை பணம் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
நகைக்கடையில் 10 பவுன் நகை திருட்டு:பெண் ஊழியர் உள்பட இரண்டு பேர் கைது:
மதுரை மேலமாசி வீதியில் பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது. சம்பவத்தன்று, இவரது கடையில் 10 பவுன் நகை காணவில்லை. இது குறித்து, நகைக்கடை மேலாளர் கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வில் கடை ஊழியர்களான திருச்சி மதுரை ரோடு தர்கா காலனி அன்வர் அலி மகன் அப்துல் ரியாஸ் 26, கோவை அன்னை சத்யா வீதியைச் சேர்ந்த விபின் குமார் மனைவி திவ்யா( 29 ). இரண்டு பேரும் திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நகை கடையின் மேலாளர் வெளிச்சநத்தத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கார்த்திக்( 33.).தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார் .இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை திருடிய ஊழியர்கள் அப்துல் பியாஸ், திவ்யா இதுவரையும் கைது செய்தனர்.
அவனியாபுரத்தில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது:
மதுரை , அவனியாபுரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அருண்.இவர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, செம்பூரணி சாலையில் ஓட்டல் ஒன்றின் பின்புறம் கும்பல் ஒன்று சூதாடிக்கொண்டிருந்தது. அவர்களை, சுற்றி வளைத்து பிடித்தார்.அவர்களிடம் விசாரணை நடத்தினார் .விசாரணையில் அவனியாபுரம் அம்பேத்கர் நகர் ஸ்டாலின் மகன் தங்கமுத்து(19,). தந்தை பெரியார் நகர் வேலுச்சாமி(19,), விருதுநகர் கொசவகுண்டு கண்ணன் மகன் முனியாண்டி(26,) செம்பூரணி ரோடு பால்ச்சாமி மகன் மாணிக்கவாசகம்( 25 ) என்று தெரியவந்தது. அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த சீட்டுக்ட்டுகளையும் சூதாடிய பணம் ரூ 500-ஐயும் பறிமுதல் செய்தார்.