பைக்கில் சென்றவர் வைத்திருந்த 60 பவுன் நகை காணவில்லை: போலீஸார் விசாரணை
மதுரையில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடை 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்;
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் அய்யங்காளை மகன் செல்வேந்திரன்(34 ) . இவருடைய மாமனாரின் 60 பவுன் நகைகள் இவரிடம் இருந்தன. இதை அவர் பைக்கில் மாமனாரிடம் கொடுப்பதற்காக பைக்கில் கொண்டு சென்றார் .இவர் குலமங்கலம் மெயின் ரோடு மகாத்மா காந்தி நகர் அருகே சென்றபோது பைக்கில் வைத்திருந்த நகையை சோதனை செய்தார். அப்போது அது மாயமானது தெரியவந்தது. பைக்கில் வைத்து இருந்த நகைகள் எப்படி மாயமானது என்று தெரியவில்லை. பைக்கில் இருந்து தவறி விழுந்ததா ?அல்லது வேறு யாரும் திருடிச் சென்று விட்டனரா என்றும் தெரியவில்லை. இது குறித்து செல்வேந்திரன் செல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை வாங்குவது போல் நடித்து மூன்றே முக்கால் பவுன் சங்கிலி திருட்டு
மதுரை லட்சுமிபுரம் ஏழாவது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(49.). இவர் நகைக்கடை பஜாரில் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலை இவரது கடைக்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் வந்தனர். அவர்கள் கடையின் வாடிக்கையாளர் என்று கூறி நகை வாங்க வந்துள்ளதாக தெரிவித்தனர். பல்வேறு டிசைன்களை காண்பிக்க சொல்லி உள்ளனர். பின்னர் டிசைன் பிடிக்கவில்லை என்று திரும்பிச் சென்று விட்டதா கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடை ஊழியர்கள் கடையில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்தனர். அப்போது அவற்றில் மூன்றே முக்கால் பவுன் தங்கச் செயின் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து நகைக்கடை உரிமையாளர் வெங்கடேசன் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து நகை கடையில் கைவரிசை காட்டி திருடிய இரண்டு பெண்களை தேடி வருகின்றனர் . நகைக்கடையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு வேலை வாங்கி தருவதாகரூ ஏழரை லட்சம் மோசடி:ஒருவர் கைது .
மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் ஸ்ரீ துர்கா( 23.). இவரிடம் கே புதூர் கொடிக்குளம் தனலட்சுமி நகரை சேர்ந்த முத்துக்குமார்(50 )என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார் .அவரது பேச்சை நம்பிய ஸ்ரீதுர்கா ரூ பதினோரு லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட முத்துக்குமார் அவருக்கு சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. ஏமாற்றிய வருவதாக தெரிய வந்தது.இதனால் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார் .அதில்ரூ மூன்று லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்துள்ளனர். சில நாட்கள் கழித்து மீதமுள்ள பணத்தை கேட்டபோது தராமல் அவரை குடும்பத்துடன் மிரட்டியுள்ளனர். இது குறித்து ஸ்ரீ துர்கா கே .புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் முத்துக்குமார், அவருடைய மனைவி பிரபா மகன் ஸ்ரீஹரி மருமகன் சுரேந்தர் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.
வீட்டு உபயோக பொருட்களை போலி பில் மூலம் விற்பனை செய்து ரூ 22.35 லட்சம் மோசடி: 3 பேர் கைது
மதுரை எஸ் எஸ் காலனி ராம்நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மைக்கேல் அருள் ராயன்( 54 ).இவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.இந் நிறுவனத்தில் அலங்காநல்லூர் தனிச்சியம் மெயின்ரோடு அன்பரசு மகன் நேதாஜி( 24,) நரிமேடு சாலை முதலியார் தெரு மாரிமுத்து மகன் விஜயகுமார்(33 ),ஆரப்பாளையம் மேல மாரியம்மன் கோவில் தெரு, அருள் ஜோ(43 ) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் இந்த கடையில் இருந்து போலியான பில் மூலம் பொருட்கள் விற்பனை செய்தது கடையின் உரிமையாளருக்கு தெரிய வந்தது. இதன் மூலம் கடையில் இருந்து ரூ 22 லட்சத்து 35 ஆயிரத்து 260 ரூபாய் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட பொருட்களை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முகமது உசேன் மகன் சாகுபர்சாதிக் என்பவருக்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி குறித்து மைக்கேல் அருள்ராயன், எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து நேதாஜி, விஜயகுமார், அருள்ஜோ ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
மாணவியை திருமண செய்து கொள்ள வேண்டுமென மிரட்டி ஆட்டோ டிரைவர் கைது
மதுரை கீரைத்துறை இருளப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் முத்துராமலிங்கம்( 25 ).இவர் ஆட்டோ ஓட்டுகிறார். இவர் அனுப்பானடியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை ஒருதலையாய் காதலித்து ஆறு மாத காலமாக பின்தொடர்ந்து சென்றுள்ளார்.அவரிடம் தனது காதலை தெரிவித்துள்ளார் .அதற்கு அவர் மறுத்து விட்டார் .இருந்தபோதும் அவர் விடவில்வை பின்தொடர்ந்து சென்றுவந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்து மிரட்டி கட்டாயமாக திருமணம் கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த மாணவி மறுத்ததால் அவரை ஆபாசமாக பேசி கல்லால் தாக்கி அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் அந்த மாணவி அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவருக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் முத்துராமலிங்கத்தை கைது செய்தனர்.