தமிழகத்தில் ஒரு கோடிப் பேருக்கு மருத்துவ பெட்டகம் வழங்க திட்டம்: அமைச்சர்
தமிழகத்தில் ஒரு கோடிப் பேருக்கு மருத்துவ பெட்டகம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;
கள்ளிக்குடி அருகே மக்களை தேடி மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு மருத்துவ பெட்டகம் வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே மக்களை தேடி மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துப் பேசுகையில், தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு வீடுகள்தோறும் சென்று மருத்துவப் பெட்டகம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாகவும் இதுவரை அறுபது லட்சம் பேருக்கு வழங்கப் பட்டுள்ளது.
மேலும், சர்க்கரை நோயாளி, நாள்பட்ட வியாதிகள் ,ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளுக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கப்படுகிறது. மக்கள் மருத்துவமனை அலைய கஷ்டப்படுவதாகவும், அதைத் தவிர்க்கவே இந்த மாதிரி திட்டங்களை அரசு செயல்படுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.