மதுரை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2023-06-14 01:06 GMT

மதுரை மாநகராட்சியில் மேயர் தலைமையில், மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.5 (மேற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், ஆணையாளர் பிரவீண்குமார், முன்னிலையில், மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றத்தில் உள்ள மேற்கு மண்டலம் 5 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி, பெயர் மாற்றம் தொடர்பாக 20 மனுக்களும், புதிய சொத்து வரி விதிப்பு மற்றும் சொத்து வரி தொடர்பாக 36 மனுக்களும், காலிமனை வரி வேண்டி 9 மனுக்களும், பாதாளச்சாக்கடை அடைப்பு சரிசெய்தல் வேண்டி 15 மனுக்களும், சுகாதார வசதி வேண்டி 8 மனுக்களும், குடிநீர் வசதி வேண்டி 8 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 6 மனுக்களும், சாலை வசதி வேண்டி 24 மனுக்களும், தெருவிளக்கு வசதி வேண்டி 3 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 9 மனுக்களும் என, மொத்தம் 138 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக பெறப்பட்டது.

இம்முகாமில், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, மாநகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், நிர்வாக அலுவலர் ஆறுமுகம், உதவி வருவாய் அலுவலர் ராஜ்குமார், கண்காணிப்பாளர் செல்வகுமார், சுகாதார அலுவலர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News