மதுரையில் விதியை மீறி இயக்கிய வாகனங்களுக்கு அபராதம் :போலீசார் நடவடிக்கை

Penalty For Vehicles Police Action விதி மீறி இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதித்தனர்.;

Update: 2024-03-12 09:04 GMT

விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்த போலீசார். 

Penalty For Vehicles Police Action

மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் செல்வின் தலைமையில் மற்றும் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் இன்று குருவிக்காரன் பாலம் சாலை முதல் ராம்நாடு ரிங் ரோடு வரை அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள் , நம்பர் பிளேட் மாற்றம் செய்துள்ள வாகனங்கள் , குடிபோதையில் வாகனம் இயக்குதல் போன்ற போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் தக்க அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வாகனங்களில் தவறான நம்பர் பிளேட்டுகள் நீக்கம் செய்யப்பட்டது.வாகனங்களில் பொருத்தப்பட்ட அதிக ஒளி உமிழும் விளக்குகள் அகற்றப்பட்டு விதிகளை மீறி செயல்பட்ட அனைவருக்கும் தக்க அறிவுரை வழங்கப்பட்டது போக்குவரத்து உதவி ஆணையாளர் செல்வின் கூறுகையில்: விதிமீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதமும் மற்றும் அதிவேகமாக மற்றும் மது போதையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது உரிமம் ரத்து மற்றும் கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும், எச்சரிக்கை விடுத்துள்ளார். இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து, நடைபெறும் எனவும் கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தலைக்கவசம் அணிந்தும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்தும் பயணிக்க வேண்டும் எனவும், தெரிவித்தார். இது போன்ற நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் இனி இது போன்ற வாகன சோதனைகள் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் எனவும் என விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில், விதிகளை மீது இயக்கப்படும் ஆட்டோக்களை, கட்டுப்படுத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும், போலீசார்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில், பல இடங்களில் பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்கள் மினிபஸ்கள் போல நிறுத்தி அதிக அளவில் பயணிகளை ஏற்றுகின்றனர். அத்துடன், பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்கள் பயிர்களை ஏற்றுவதால் பயணிகள் பஸ்ஸுக்கு சென்று பயணம் செய்ய இடையூறாக உள்ளது. அத்துடன், சில ஆட்டோக்கள் பெர்மிட் இன்றி இயக்கப்

படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை நகரில், அண்ணா பஸ் நிலையம், சிம்மக்கல், புதூர், கே கே நகர், கருப்பாயூரணி அப்பர் பள்ளி அருகில், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், திருநகர், திருமங்கலம், சோழவந்தான், வாடிப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பஸ் ஸ்டாப் அருகேயும், பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களிலும் ஆட்டோக்களை வரிசையாக சாலை நிறுத்திக் கொண்டு, இடையூர்கள் செய்வதாக, பொதுமக்கள் பல குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, போலீஸாரும், வட்டார போக்கு வரத்து அலுவலரும், இறுதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ,இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News