மதுரையில் அட்சய பாத்திரம் சேவை அமைப்பின் அலுவலகம் திறப்பு
மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார்;
மதுரை பொன்மேனி எஸ்.எஸ். காலனியில், ஸ்ரீ மஹா பெரியவா க்ருஹம் மற்றும் மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். இதில், மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் சேர்மன் நெல்லை பாலு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் வி. ராமகிருஷ்ணன், ஆடிட்டர் எஸ்.எல். சேதுமாதவன், நந்தினி ரியல் எஸ்டேட் உரிமையாளர் எம்.ஆர்.பிரபு, ஸத் சங்கம் செயலர் வி ஸ்ரீ ராமன், எஸ்விஎஸ் கடலைமாவு நிர்வாக பங்குதார் சூரஸ் சுந்தர சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.