அக். 20-ல் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமி: சிவனுக்கு அன்னாபிஷேக விழா

ஐப்பசி பௌர்ணமியன்று சிவபெருமான் மீன்களுக்கு உணவு அளிப்பதாக ஐதீகம். அதன்படி கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது

Update: 2021-10-15 14:30 GMT

பைல் படம்

கோயில்களில், அக்.20-ல் ஐப்பசி பௌர்ணமி நாளில் அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது

தமிழகத்தில் உள்ள கோயில்களில், ஆண்டுதோறும் ஐப்பசி பௌர்ணமி நாளில்  சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். ஐப்பசி பௌர்ணமியன்று, சிவபெருமான் மீன்களுக்கு உணவு அளிப்பதாக ஐதீகம். அதன்படி, கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டத்தில், மீனாட்சியம்மன், தெப்பக்குளம் மூக்தீஸ்வரர், மதுரை சிம்மக்கல் பழைய சொக்கநாதர், இம்மையில் நன்மை தருவார், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாதசுவாமி, மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரர் ஆலயம், மேலமடை சௌபாக்யா விநாயகர், ஆவின் பால விநாயகர், மேலமடை சித்தி விநாயகர் ஆகிய ஆலயங்களில், ஐப்பசி பௌர்ணமியான, 20.11.2021..புதன்கிழமை மாலை 5.30..மணிக்கு சிவனுக்கு சகல அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெறும். பக்தர்கள், கட்டாயமாக முகக் கவசம் அணிந்து, பங்கேற்க கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:    

Similar News