திருமங்கலம் அருகே வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்க ஒத்திகை
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒத்திகை பயிற்சி பொதுமக்கள் முன்னிலையில் தீயணைப்பு மீட்புத்துறையினரால் நடத்தப்பட்டது;
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் தீயணைப்புத்துறையினரால் நடத்தப்பட்ட பேரிடர் மீட்பு ஒத்திகை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒத்திகை பயிற்சி பொதுமக்கள் முன்னிலையில் தீயணைப்பு மீட்புத்துறையினரால் நடத்தப்பட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தீயணைப்பு நிலையத்தின் சார்பாக, வடகிழக்கு பருவமழைக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலி ஒத்திகை பயிற்சி, ஆலம்பட்டி கிராமம் கல்குவாரியில் என்ற இடத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராணி மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலும் மற்றும் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர்பா. முருகேசன் துணைத்தலைவர் மன்மதன் முன்னிலையும், ஆலம்பட்டி கிராம பொது மக்களுக்கு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல்விளக்கம் நடத்தி காண்பிக்கப்பட்டது.