மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை

மங்களூரு குண்டுவெடிப்பு மதுரையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்;

Update: 2022-11-26 10:15 GMT
மதுரையில்  என்.ஐ.ஏ. அதிகாரிகள் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை

பைல் படம்

  • whatsapp icon

மங்களூரு குண்டுவெடிப்பு  சம்பவம் தொடர்பாக  மதுரையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் மங்களூருவில் கடந்த 19-ந் தேதி ஓடும் ஆட்டோவில் திடீரென குக்கர் குண்டு வெடித்தது. இதில் அந்த ஆட்டோ டிரைவர் மற்றும் குக்கர் குண்டுடன் பயணித்த பயங்கரவாதி ஷாரிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதில் ,முக்கிய மூளையாக செயல்பட்டதாக, சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக்( 22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஷாரிக்கின் மைசூர் வீடு மற்றும் உறவினர்-நண்பர்களின்வீடுகளில், அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது ,அங்கு ஒரு டைரி சிக்கியது.அதில் பயங்கரவாதி ஷாரிக் தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, நாகர்கோவில் ஆகிய 4 நகரங்களுக்கு வந்து சென்ற விவரம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஷாரிக் மதுரையில் தங்கியதாக கூறப்பட்டதாக சந்தேகிக்கும் பகுதிகளான மதுரை டவுன்ஹால் ரோடு, கட்ராபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள தங்கு விடுதிகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் ஷாரிக் நடமாட்டம் இருந்திருக்க கூடும் என்ற அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தினர்.

மதுரைக்கு ஷாரிக் வந்தபோது எங்கெல்லாம் சென்றார்? அவரை யாரும் சந்தித்து பேசினார்கள்? தனி அறையில் ரகசிய ஆலோசனை நடத்தினார்களா? அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்பது தொடர்பாக தங்கு விடுதிகளில் உள்ள வருகைபதிவேடு சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News