இளைஞர்கள் நல்ல பாதையில் பயணிக்க வேண்டும்: புதுவை அமைச்சர் பேச்சு
National Integration Camp நமது நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய இளைஞர்கள் , போதை மற்றும் தீவிரவாத செயல்களுக்கு அடிமையாகி வருவது வேதனை அளிக்கிறது, எனதேசிய ஒருமைப்பாட்டு முகாமில் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.;
National Integration Camp
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள தனியார் கலை கல்லூரி வளாகத்தில், ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் மூலம் 7 நாட்கள் நடைபெற்று வரும் தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் , தமிழ்நாடு, கர்நாடகா ,கேரளா , தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ஒடிசா, மகாராஷ்ட்ரா, மேற்கு வங்காளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுதேச ஒற்றுமை , தேச முன்னேற்றம், கலாச்சார பரிமாற்றம் போன்றவற்றை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பேச்சும் , கலாச்சார நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்திக் காட்டினர்.
இம்முகாமிற்கு , சிறப்பு விருந்தினராக வந்த புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசும் போது,நம்முடைய நாட்டில் பல்வேறு மொழி, இனம், மதம், , கலாச்சாரங்களை சார்ந்தவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், ஆனால், நாம் அனைவரும் இந்தியர் என்பதை பெருமை கொள்வோம். இந்த நேரத்தில் கவலை கொள்ளக்கூடிய செய்திகள் சம்பவமும் நடைபெறுவது வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
எதிர்காலத்தில் நமது நாட்டை வளர்ச்சி அடையச் செய்வதும், அதனை பொறுப்பில் எடுத்துக் கொள்ளக்கூடிய இளைஞர்கள், எதிர்கால நம்பிக்கையாக இருக்கக்கூடிய இளைஞர்கள், இன்றைக்கு தவறான பழக்க, வழக்கங்களுக்கு உட்பட்டு , தவறான பாதைகளை நோக்கி செல்கின்றனர்.
எதனைக் குறிப்பிட்டு சொல்வதென்றால், போதைப்பழக்க, வழக்கங்களுக்கு அடிமையாகி வருவதும், தீவிரவாத செயல்களுக்கு ஈடுபட்டு வருவதும், நமது நாட்டினுடைய வளர்ச்சிக்கு தடைக்கல்லாக நம்முடைய இளைஞர்களுடைய செயல்பாடுகள் இருப்பதைக் கண்டு நமக்கு வருத்தத்தை அளிக்க கூடியதாக உள்ளது.
பல்வேறு காலங்களில் வெளிநாடுகளில் இருந்து நம்முடைய நாட்டின் மீது போர் தொடுப்பதாக இருந்தாலும் சரி, இன்றைக்கு தேசிய பேரழிவாக இருந்தாலும் சரி, இப்படி பல கால கட்டங்களில் நமது நாட்டிற்கு சோதனையாக இருக்கும் போதெல்லாம் நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒருமைப்பாட்டு உணர்வினை, நாம் உறுதி படுத்திக்கொள்ள இருக்கின்றோம். அப்படிப்பட்ட மனப்பக்குவத்தில் உள்ள நாம், நமது நாட்டை வலிமைப்படுத்தவும், சரியான பாதைக்கு கொண்டு செல்வதற்கும் பிரதமர் முன்னெடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற முறையில் தோளோடு தோள் கொடுப்பது நமது கடமையாகும் எனபேசினார்.