சோழவந்தான் கோயிலில் சலவைத் தொழிலாளர் கள் சங்கம் சார்பில் முளைப்பாரி ஊர்வலம்

ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந் திருவிழா கடந்த மாதம் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது;

Update: 2023-06-07 12:30 GMT

சலவைத்தொழிலாளர்களின் முளைப்பாரி ஊர்வலம்.

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் மண்டபடியையொட்டி சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சக்தி கரகம் முளைப்பாரி எடுத்து வழிபாடு நடத்தினர்.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந் திருவிழா கடந்த மாதம் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பால்குடம், அக்னி சட்டி, பூக்குழி, தேரோட்டம் என திருவிழா களைகட்டி வருகிறது.

பதினாறாம் நாள் மண்டகப்படியையொட்டி சோழவந்தான் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சக்தி கரகம் சுமார் 50க்கும் மேற்பட்ட முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்யப்பட்டது. ஆர்சி தெரு தொடங்கி மேளதாளம் அதிர் வேட்டுக்கள் முழங்க நான்கு ரத வீதிகளில் சுற்றி வலம் வந்து திருக்கோவிலை அடைந்து கோவில் முன்பாக கும்மி கொட்டி பின்பு அய்யவார்தெரு வைகையாற்றில் முளைப்பாரி கரைக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை சோழவந்தான் பகுதி சலவை தொழிலாளர் சங்க தலைவர் நாகராஜ் ,செயலாளர் செந்தில், பொருளாளர் ராஜபாண்டி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் சோழவந்தான் தென்கரை முள்ளி பள்ளம் பேட்டை தச்சம்பத்து திருவேடகம் மேலக்கால் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சலவைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News